×

சில்லி பாயிண்ட்

* இந்த 2 அணிகளும் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் இலங்கை 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

* சர்வதேச அளவிலான ஆட்டங்களிலும் இதுவரை இந்த 2 அணிகளும் 5 முறைதான் விளையாடி உள்ளன. அந்த 5லும் நெதர்லாந்து தோல்வியைதான் சந்தித்துள்ளது.

* உலக கோப்பை போட்டியில் முதல்முறையாக இலங்கை-நெதர்லாந்து அணிகள் களம் காண உள்ளன.

* லக்னோ அரங்கில் நெதர்லாந்து இதுவரை விளையாடியதில்லை. இலங்கை இந்த தொடரில்தான் முதல்முறையாக அங்கு களம் கண்டது. அதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.

* நடப்புத் தொடரில் நெதர்லாந்து அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியையும், தென் ஆப்ரிக்காவிடம் வெற்றியையும் பெற்றுள்ளது.

* இலங்கை அணி இதுவரை தான் விளையாடிய 3 ஆட்டங்களில் முறையே தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

* லக்னோவில் இதுவரை நடந்த 6 ஒருநாள் ஆட்டங்களில் முதலில், 2வது பேட்டிங் செய்த அணிகள் தலா 3 வெற்றி, 3தோல்வி என சமநிலையில் இருக்கின்றன.

The post சில்லி பாயிண்ட் appeared first on Dinakaran.

Tags : Silly Point ,Sri Lanka ,Silly ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...