×

அரையிறுதியில் ராம்குமார்

கர்நாடகாவின் தர்வாடில் நடக்கும் ஐடிஎப் ஆடவர் உலக டென்னிஸ் டூர் போட்டி நடக்கிறது. அங்கு நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன், பிரஜ்வால் தேவ் ஆகியோர் மோதினர். அதில் ராம்குமார் 6-4, 4-6, 6-1 என்ற செட்களில் பிரஜ்வாலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

* செமி பைனலில் மேரி

சீனாவில் நடைபெறும் ஜியாங்சி ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதில் மேரி பவுஸ்கோவா,கேத்ரினா சினியக்கோவா,(செக் குடியரசு), லெய்லா பெர்னாண்டஸ்(கனடா), டயனா ஷ்னய்டர்(ரஷ்யா) ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

The post அரையிறுதியில் ராம்குமார் appeared first on Dinakaran.

Tags : Ramkumar ,IDF Men's World Tennis Tour ,Dharwad, Karnataka ,Dinakaran ,
× RELATED மனைவி இறந்ததால் மகனுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை