×

இதுவரை 229 வேட்பாளர்கள் அறிவிப்பு ம.பியில் 88 தொகுதிக்கு காங்கிரஸ் பட்டியல் ரிலீஸ்: அம்லா தொகுதி மட்டும் நிறுத்திவைப்பு

போபால்: புதிதாக 88 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்ததால், மபியில் 229 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்து விட்டது. மபியில் உள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ.17ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜ சார்பில் 136 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் 144 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இதில் சில தொகுதிகளுக்கு எதிர்ப்பு எழுந்ததால் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நிறுத்தி வைத்தது. நேற்று மேலும் 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

இதனால் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 229 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. பெதுல் மாவட்டத்தில் உள்ள அம்லா தொகுதி வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.
அந்த தொகுதியில் போட்டியிட விரும்பிய துணை கலெக்டர் நிஷா பாங்க்ரே தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ அரசிடம் சமர்ப்பித்து உள்ளார். ஆனால் அதை இன்னும் ஏற்காததால், அவர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். இதனால் அந்த தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post இதுவரை 229 வேட்பாளர்கள் அறிவிப்பு ம.பியில் 88 தொகுதிக்கு காங்கிரஸ் பட்டியல் ரிலீஸ்: அம்லா தொகுதி மட்டும் நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Amla ,Bhopal ,Mabi ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு