×

சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரியிடம் சி.பி.ஐ விசாரணை: இடைத்தரகர்கள் பேரம் பேச உதவிய தமிழ் சினிமா பிரபலங்கள் சிக்குகின்றனர்

சென்னை: ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் இந்தியில் வெளியிடுவதற்கு மகாராஷ்டிரா மாநில சென்சார் போர்டு அதிகாரிகள், தரகர்கள் மூலம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். தமிழ் நடிகர் விஷால் நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த திரைப்பத்தை இந்தியில் வெளியிட திரைப்பட குழுவினர் முடிவு செய்தனர். அதற்காக மார்க் ஆண்டனி திரைப்படத்தை மும்பையில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் சென்சார் போர்ட் அனுமதி கேட்டு பரிந்துரைக்கப்பட்டது. படம் இந்தியில் வெளிட சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதன்படி தரகார் ஜீஜா ராமதாஸ் என்பவர் மூலம் மார்க் ஆண்டனி திரைப்படம் இந்தியில் வெளியிட பணம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் விஷால் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு மூலம் இந்த சம்பவத்தில் பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா மாநில முதலவர் தலையிட வேண்டும் என்று குற்றம்சாட்டி இருந்தார். நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கவனத்திற்கு சென்றது. அதன்படி ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ‘மிக துரதிர்ஷ்டவசமான குற்றச்சாட்டியது. மேலும், ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அளித்த புகாரின்படி, சிபிஐ அதிகாரிகள், லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட சென்சார் போர்டு அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் மார்க் ஆண்டனி திரைப்பட இந்தியில் வெளியிட ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டு, இரண்டு தவணையாக ரூ.6.54 லட்சம் பணம் 2 தரகர்கள் மூலமாக 2 வங்கி கணக்குகளில் லஞ்சப்பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட ஆவணங்கள் சிக்கியது. மேலும், மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு தரகர்கள் மூலமாக இந்த சான்றிதழை பெறுவதற்கு 20 ஆயிரம் ரூபாய் கமிஷனும், பெண் தரகர் எடுத்துக் கொண்டதற்கான ஆவணங்களும் சிக்கியது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் தரகர்களாக செயல்பட்ட மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கு இந்தியில் சான்று வழங்கி இடைத்தரகர்கள் நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனின் மூலம் தான் பேரம் பேசியது மகாராஷ்டிரா மாநில சென்சார் போர்டு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து மும்பையில் உள்ள சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரியை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டது. அதன்படி விஷாலின் உதவியாளர் ஹரி நேற்று முன்தினம் மற்றும் 2வது நாளாக நேற்றும் மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது சிபிஐ அதிகாரிகள் ஹரி கிருஷ்ணனிடம், மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு அனுமதி வழங்க உங்களை அனுகியது. பேரம் பேசிய நபர்கள் யார் யார் என்பது குறித்து கேள்விகள் எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், ரூ.6.5 லட்சம் பணம் கொடுக்க தமிழகத்தை சேர்ந்த சினிமா பிரபலங்கள் சிலர் பேரம் பேசிய நபர்களுக்கு உதவியதாக கூறப்படுகிறது. இதனால் சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சினிமா பிரபலங்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதற்கு ஹரி கிருஷ்ணன் தனது செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள் முழு விபரங்களை சிபிஐ அதிகாரிகளிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹரி கிருஷ்ணன் அளித்த தகவலால், பேரம் பேச தமிழகத்தில் உள்ள சினிமா பிரபலங்கள் சிலர் உதவியாதாக கூறப்படுகிறது. இதனால் சிபிஐ அதிகாரிகள் விரைவில் சம்பந்தப்பட்ட சினிமா பிரபலங்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரைப்படம் இந்தியில் வெளியிட மகாராஷ்டிரா மாநில சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரியிடம் சி.பி.ஐ விசாரணை: இடைத்தரகர்கள் பேரம் பேச உதவிய தமிழ் சினிமா பிரபலங்கள் சிக்குகின்றனர் appeared first on Dinakaran.

Tags : CBI ,Vishal ,Hari ,Censor Board ,Chennai ,Maharashtra State Censor Board ,Mark Antony ,
× RELATED சொல்லிட்டாங்க…