×

‘நமோ பாரத்’.நாட்டின் முதல் பிராந்திய விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி: பள்ளி குழந்தைகளுடன் பயணம்!!

லக்னோ: உத்தரபிரேதம் சாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ இடையே நாட்டின் முதல் நமோபாரத் பிராந்திய விரைவு ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டில் நகரங்களுக்கு இடையேயான தொடர்பை அதிகரிக்க விரைவு ரயில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, டெல்லி-காஜியாபாத்-மீரட் வழித்தட சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.அத்துடன் பள்ளி குழந்தைகள் மற்றும் ரயில் பணியாளர்களுடன் பிரதமர் மோடி பயணம் செய்தார்.

இந்த ரயில் நமோபாரத் என்று அழைக்கப்படும் இந்தியாவின் முதல் RapidX ரயில் இதுவாகும். இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ரேபிட் டிரான்ஸிட் ரயிலுக்கு ‘நமோ பாரத்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, உத்தரப்பிரதேசத்தில் 17 கி.மீ. நீளமுள்ள சாஹிபாபாத் ( மற்றும் துஹாய் வழித்தடத்தில் இச்சேவைத் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.30,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் டெல்லியில் இருந்து மீரட்டை இணைக்கும், காஜியாபாத், முராத்நகர் மற்றும் மோடிநகர் ஆகிய நகர்ப்புற மையங்கள் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பயணிக்க முடியும். இது நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ‘நமோ பாரத்’.நாட்டின் முதல் பிராந்திய விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி: பள்ளி குழந்தைகளுடன் பயணம்!! appeared first on Dinakaran.

Tags : Namo Bharat ,Modi ,Lucknow ,Uttarpredam Sahibabad ,Duhai depot ,PM Modi ,
× RELATED காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள்...