×

இந்திய அளவில் ஆன்மீகத்துறையில் தனக்கென தனி அடையாளம் பதித்தவர்: பங்காரு அடிகளார் மறைவுக்கு சரத்குமார் இரங்கல்..!!

சென்னை: பங்காரு அடிகளார் மறைவுக்கு வெளிநாட்டில் இருந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்டவரும், மரியாதைக்குரிய சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். திரளாக பெண்கள் மேல்மருவத்தூர் சென்று வழிபட காரணமாக அனைத்து நாட்களிலும் பெண்களுக்கு கோவிலில் அனுமதியளித்து, ஆன்மீக புரட்சி செய்தவர். இந்திய அளவில் ஆன்மீகத்துறையில் தனக்கென தனி அடையாளம் பதித்தவர்.

அவரது இழப்பு ஆன்மீகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் பக்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்லூரி மற்றும் கலாச்சார அறக்கட்டளையைச் சார்ந்தவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறை தொண்டில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து பிரியாவிடை கண்ட அன்னாரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இந்திய அளவில் ஆன்மீகத்துறையில் தனக்கென தனி அடையாளம் பதித்தவர்: பங்காரு அடிகளார் மறைவுக்கு சரத்குமார் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Sarathkumar ,Bangaru Adikalar ,India ,Chennai ,India Equality People's Party ,Bangaru ,Adikalar ,
× RELATED கையை வலுப்படுத்தக் கோரிய ராதிகா: காங்....