×

தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் குடந்தை விவசாயிகளுக்கு 3 ஆயிரம் மரக்கன்றுகள்

 

கும்பகோணம், அக். 20: தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கும்பகோணம் வட்டாரம், வாளபுரம் பகுதியில் 12 விவசாயிகளுக்கு 3,000 மரக்கன்றுகள் நேற்று இலவசமாக வழங்கப்பட்டன. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் 2023-24ம் ஆண்டுக்கான இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கும்பகோணம் வட்டாரத்துக்கு 18,500 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவை, விவசாயிகள் மாதமாதம் பெறவும், ஆண்டுதோறும் தொடர் வருமானம் பெறவும், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மரக்கன்றுகள் வயல் முழுவதும் நடுவதாக இருந்தால் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 320 கன்றுகளும், வரப்பில் நடுவதாக இருந்தால் 100 கன்றுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மரக்கன்றுகளை தொடர்ந்து வளர்த்து பராமரிக்க ஒரு கன்றுக்கு ரூ.7 வீதம், மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு மானியமாக வழங்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக, கும்பகோணம் வட்டாரம், வாளபுரம் பகுதியில் 12 விவசாயிகளுக்கு 3,000 மரக்கன்றுகள் வேளாண்மை துணை அலுவலர் சாரதி முன்னிலையில் நேற்று வழங்கப்பட்டன.

மேலும், சோழபுரம் பேரூராட்சி, மகாராஜபுரம் அரசு வனத்துறை மத்திய பண்ணையில் தேக்கு, மகாகனி ஆகிய உயர் ரக மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. எனவே, விவசாயிகள் இந்த மரக்கன்றுகளை பெற உழவன் செயலியில் பதிவுசெய்து சிட்டா அடங்கல், ஆதார் நகல், கைபேசி எண் ஆகிய ஆவணங்களை கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று மரக்கன்றுகளை பெற பர்மிட் பெற்று செல்லலாம் என கும்பகோணம் வேளாண்மை இயக்குநர் (பொ) தேவி கலாவதி அறிவுறுத்தியுள்ளார்.

The post தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் குடந்தை விவசாயிகளுக்கு 3 ஆயிரம் மரக்கன்றுகள் appeared first on Dinakaran.

Tags : Kudanta ,Tamil Nadu Green Movement ,Kumbakonam ,Kumbakonam district ,Valapuram ,Tamil Nadu Agriculture Farmer Welfare Department ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...