×

திண்டுக்கல்லில் ஹாக்கி போட்டி

திண்டுக்கல், அக். 20: திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகள் என தனித்தனியாக போட்டிகள் நடந்தது. இதில் 14 வயது மாணவர் பிரிவில் திண்டுக்கல் புனித சேவியர் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், நத்தம் துரைக்கமலம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், 14 வயது மாணவியர் பிரிவில் திண்டுக்கல் புனித சேவியர் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பஞ்சம்பட்டி அகஸ்தினார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தன. 17 வயது மாணவர் பிரிவில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பழநி சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், 17 வயது மாணவியர் பிரிவில் முத்தழகுப்பட்டி புனித சேவியர் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பஞ்சம்பட்டி அகஸ்தினார் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும் பெற்றனர். 19 வயது மாணவர் பிரிவில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதலிடமும், நத்தம் துரைக்கமலம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், 19 வயது மாணவியர் பிரிவில் பஞ்சம்பட்டி அகஸ்தினார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும் பெற்றனர். போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆய்வாளர் ரஹமத் கனி, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் விக்டர், உடற்கல்வி இயக்குனர்கள் ஜெயசீலன், விமல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post திண்டுக்கல்லில் ஹாக்கி போட்டி appeared first on Dinakaran.

Tags : Dindigul ,St. ,Mary's High School Hockey Tournament ,Dindigul Hockey Tournament ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை