×

கல்லூரி மாணவி கடத்தல்: கார் டிரைவர் மீது புகார்

கிருஷ்ணகிரி, அக்.20: பர்கூர் அருகேயுள்ள அஞ்சூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, மீண்டும் திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், பர்கூர் அடுத்த ஜகுண்டம்புதூரை சேர்ந்த கார் டிரைவர் சிலம்பரசன் என்பவர், தங்களின் மகளை காதலித்து வந்தார். திருமண ஆசைகாட்டி கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி கடத்தல்: கார் டிரைவர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Anjoor ,Parkur, PCA ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்