×

மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் ஒன்றிய அரசு உடனே முற்று புள்ளி வைக்க வேண்டும்: வைகோ கோரிக்கை

சென்னை: மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு ஒன்றிய பாஜ அரசு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி பல்வேறு சம்பவங்களில் மீனவர்களை தாக்கி விட்டு பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். இதுபோல, வேறொரு படகில் சென்ற நான்கு மீனவர்களையும் தாக்கி இலங்கை கடற்கொள்ளை கும்பல் 15 கிலோ வலை உள்ளிட்ட மீன்பிடி கருவிகளையும், 40 கிலோ மீன் மற்றும் மீனவர்களின் உடமைகளையும் பறித்து சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஒன்றிய பாஜ அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் விடுதலை செய்து மீன்பிடி படகுகளை திரும்பப் பெறவும் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

The post மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் ஒன்றிய அரசு உடனே முற்று புள்ளி வைக்க வேண்டும்: வைகோ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : WAICO ,CHENNAI ,Union BJP government ,Union government ,Vaiko ,Dinakaran ,
× RELATED ஒன்றிய பாஜ அரசின் அடக்குமுறை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்