×

அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய வழக்கு இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுவிப்பு

கொழும்பு: இலங்கையில் கடும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 2022 ஜூலை 9ம் தேதி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.170 லட்சத்துக்கும் அதிகமான பணம் கட்டுக்கட்டாக குவித்து வைக்கப்பட்டிருந்ததை போராட்டக்காரர்கள் கண்டுபிடித்தனர். இந்நிலையில், கோத்தய ராஜபக்சேவுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை கைவிடுவதாகவும் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என்றும் இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

The post அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய வழக்கு இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : President ,Gotabaya Rajapakse ,Colombo ,Sri Lanka ,Ex- ,Gotabaya Rajapaksa ,
× RELATED பாஜக மாவட்ட துணை தலைவரை தாக்கிய வழக்கில் பாஜக ஒன்றிய தலைவர் கைது