×

வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு விஜய் நடித்த “லியோ” திரைப்படம் பார்க்க சென்று திரும்பிய ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் திரையரங்கில் விஜய் நடித்த “லியோ” திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் காமராஜர் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தியதால் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காமராஜர் சாலையில் பாலாஜி, ராஜா மற்றும் ஜீவா ருக்மணி ஆகிய திரையரங்குகள் உள்ளன.

ஒரே வீதியில் அனைத்து திரையரங்குகளை உள்ளதால் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நேரத்தில் ரசிகர்களின் கூட்டம் காமராஜர் சாலை ஆக்கிரமிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் ரசிகர்கள் திரையரங்கின் முன்பு அதிகமாக கூடியிருந்தனர்.

திரைப்படத்தை காண சென்ற பெரும்பாலான ரசிகர்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தியிருந்தனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை சீரமைத்த போலீசார் அபராத நோட்டீசை சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் ஒட்டினர்.

ஒரு வாகனத்திற்கு ரூ.200 வீதம் என அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி போக்குவரத்து போலீசார் ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வறுகின்றனர். திரைப்படம் வெளியாகும் நேரத்தில் திரையரங்கில் வாகன நிறுத்துமிடம் இருந்தும் ரசிகர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு விஜய் நடித்த “லியோ” திரைப்படம் பார்க்க சென்று திரும்பிய ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Vijay ,Puducherry ,Kamarajar road ,
× RELATED 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய் கட்சி இலக்கு