×

மெஸ்ஸி அசத்தலில் அர்ஜென்டினா வெற்றி

லிமா: பெரு அணியுடனான 2026 உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. நடப்பு உலக சாம்பியன் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி (36 வயது) 32வது மற்றும் 42வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் போட்டு அணியின் வெற்றிக்கு உதவினார். மற்றொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில் உருகுவே அணி 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியின்போது, பிரேசில் அணி நட்சத்திர வீரர் நெய்மர் முழங்கால் மூட்டு காயம் காரணமாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

The post மெஸ்ஸி அசத்தலில் அர்ஜென்டினா வெற்றி appeared first on Dinakaran.

Tags : Argentina ,Messi ,Lima ,2026 ,World Cup ,Peru ,
× RELATED அர்ஜெண்டினாவில் காலி பெட்டி மீது ரயில் மோதி 90 பயணிகள் காயம்