×

ஜனாதிபதி முர்மு சொந்த ஊருக்கு முதல் முறையாக எக்ஸ்பிரஸ் ரயில்

புவனேஸ்வர்: கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். அவர் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர்.பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டத்தில் இருந்து பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்நிலையில், ஜனாதிபதி முர்முவின் சொந்த ஊரான ராய்ரங்க்பூர் அருகில் உள்ள பதாம்பாஹர் உள்பட 4 இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

The post ஜனாதிபதி முர்மு சொந்த ஊருக்கு முதல் முறையாக எக்ஸ்பிரஸ் ரயில் appeared first on Dinakaran.

Tags : President Murmu ,Bhubaneswar ,Draupadi Murmu ,Odisha ,Mayurpanj district ,President ,Murmu ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...