×

சட்டீஸ்கரில் 2ம் கட்ட தேர்தலை ஒத்திவைக்க பாஜ கோரிக்கை

ராய்ப்பூர்: 90 முன்னாள் முதல்வரும் பாஜ தேசிய துணை தலைவருமான ராமன் சிங் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், வட இந்தியர்களின் முக்கிய பண்டிகையான சாட் பூஜை வரும் நவ.17 முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. மாநிலத்தில் ஏராளமான வட இந்தியர்கள் உள்ளனர். சாட் பூஜைக்காக அவர்கள்சொந்த ஊருக்கு சென்று விடுவர். இதனால் வாக்கு பதிவு பாதிக்கலாம். எனவே இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு 2ம் கட்ட தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியும் இதே போல் கோரிக்கை விடுத்துள்ளது.

The post சட்டீஸ்கரில் 2ம் கட்ட தேர்தலை ஒத்திவைக்க பாஜ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,phase election ,Chhattisgarh ,Raipur ,Chief Minister ,National Vice President ,Raman Singh ,of ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...