×

பாஜ என்ற சைத்தான் வெளியேறியதில் மகிழ்ச்சி: திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல்

திண்டுக்கல்: பாஜ என்னும் சைத்தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து உள்ளார். திண்டுக்கல் பேகம்பூரில் அதிமுகவின் 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: பாஜ என்னும் சைத்தானின் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி வந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எப்போதும் விலகுவோம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த கூட்டணியில் இருந்து விலகியதால் 100 சதவீதம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

அதேபோன்று எடப்பாடி பழனிசாமி 1,000 சதவீதம் மகிழ்ச்சியாக உள்ளார். 10 பேர் இருக்கிற பாஜவினர் அடுத்த முதல்வர் அண்ணாமலை என கூறுகின்றனர். பாஜவுடன் கூட்டணி வைத்தால் தான் தமிழகத்தில் வெற்றி கிடைக்கும் என்ற சூழ்நிலை எங்களுக்கு கிடையாது. அவர்களால் அதிமுக வளரவில்லை, அதிமுகவினால் தான் பாஜ வளர்கிறது. அதனால் தான் கூட்டணிக்கு அழைக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு துரோகம் செய்யக்கூடிய பாஜவுடன் இப்போது மட்டுமல்ல. அதிமுக எப்போதும் இனி கூட்டணி வைத்து கொள்ளாது. இவ்வாறு அவர் பேசினார்.

The post பாஜ என்ற சைத்தான் வெளியேறியதில் மகிழ்ச்சி: திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Baja ,Dindigul Srinivasan ,Dindigul ,Ex-minister ,BJP ,
× RELATED எடப்பாடி ஆட்சியை சரியில்லை என பிரதமர்...