×

மருத்துவமனை மீது தாக்குதல்: காசா பலி 1,000 ஆக உயர்வு?

காசா: காசா மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் பலி எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள அல்-அஹ்லி மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இத்தகைய சூழலில், அந்த மருத்துவமனையில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட ராக்கெட் தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

இஸ்ரேல் விமானப்படை வான்வழியாக தாக்குதல் நடத்தியது தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இருந்தும், இஸ்ரேல் தரப்பில் இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை என்றும், இந்த தாக்குதலை ஹமாஸ் அமைப்பினர் நடத்தியதாக குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பலரது உயிர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மருத்துவமனை மீது தாக்குதல்: காசா பலி 1,000 ஆக உயர்வு? appeared first on Dinakaran.

Tags : Attack ,Gaza ,Palestine's… ,Dinakaran ,
× RELATED ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கைது: இஸ்ரேல் அறிவிப்பு