×

வெளிநாட்டில் உள்ள 36 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; 185 கடத்தல் சிலைகள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: வெளிநாட்டில் உள்ள 36 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; 185 கடத்தல் சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

முருகன் கோவிலில் 2023-24ம் ஆண்டு சுமார் ரூ.6கோடியே 70 லட்சம் செலவில் அரசாணை

சுமார் 700 ஆண்டுகள் மேலாக உள்ள முருகன் திருக்கோவிலில் ஆய்வுக்கு வந்தபோது இந்த பகுதியில் முள்வேலி அமைப்பது, மண்டபம் கட்டுவது போன்ற பணிகளை கோரிக்கையாக வைத்தனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமைக்கு கொண்டு சென்று மழைக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் தொடர்ந்து வற்புறுத்தினார். முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் 2023-24ம் ஆண்டு அறிவிப்பில் சுமார் ரூ.6 கோடியே 70 லட்சம் செலவில் தார் சாலை அமைப்பதற்கு உத்தரவிட்டு இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் 45 நாட்களுக்குள் தொடங்கப்படும் என்று கூறினார். பக்தர்களின் தேவைக்காக சுமார் 24 பணிகள் ரூ.12 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள 36 சிலைகள் அடையாளம் காணப்பட்டு சிலைகள் மீட்பு

இதுவரை வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட 36 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 185க்கும் மேற்பட்ட சிலைகள் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. முறையாக எங்கு சிலை திருடு நடந்தாலும், மீட்கப்பட்டாலும் சிலை திருட்டு நடைபெறக்கூடாது என்பதற்காக 1380 திருக்கோவில்களில் உலோக திருமேனி அலைகளை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் ஸ்ட்ராங் ரூம்கள் 1380 உடனடியாக கட்டி முடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 245 பாதுகாப்பு அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை கடந்த கால ஆட்சியில் நடைமுறை படுத்தவில்லை. உலோக திருமேனிகள் இருக்கின்ற அறைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி எந்த தவறும் நடக்காமல் இருப்பதற்காக மாவட்ட கண்காணிப்பாளரிடம் போதிய காவலர்களை பெற்று பராமரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

The post வெளிநாட்டில் உள்ள 36 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; 185 கடத்தல் சிலைகள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister Shekharbabu ,CHENNAI ,Minister ,Shekharbabu ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...