×

லியோ திரைப்படத்தை அரசு அனுமதித்தபடியே சிறப்பு காட்சிகளை திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு..!!

சென்னை: லியோ திரைப்படத்தை அரசு அனுமதித்தபடியே சிறப்பு காட்சிகளை திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. லியோ படத்துக்கான 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதியில்லை என நேற்று உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. காலை 7 மணி முதல் லியோ திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யும். ஏற்கனவே சிறப்பு காட்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசின் முடிவுக்கு விட்டுவிடுவதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார். அனுமதி அளித்திருக்கக்கூடிய நேரத்தில் 5 காட்சிகளை திரையிடுவது பற்றி அரசுடன் ஆலோசிக்க படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து, 5 சிறப்பு காட்சிகளை காலை 9 மணிக்கு பதில் 7 மணிக்கு திரையிட லியோ தயாரிப்பு நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. இதனிடையே, திரையரங்கு உரிமையாளர்கள் கருத்தின் அடிப்படையில் காலை 9 மணிக்கு அனுமதிப்பது என்று அரசு நள்ளிரவில் அறிவித்தது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை அரசு அனுமதித்தபடியே சிறப்பு காட்சிகளை திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டதால் காட்சிகளை மாற்றுவதில் சிரமம் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் கருத்தை அடுத்து லியோ படத்தை காலை 9 மணியில் இருந்து திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

The post லியோ திரைப்படத்தை அரசு அனுமதித்தபடியே சிறப்பு காட்சிகளை திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED புலம்பெயர் தொழிலாளியை குழந்தை...