×

மாநகராட்சி கடை வாடகை தள்ளுபடி செய்ய கோரிக்கை

 

கோவை, அக். 18: கோவை மாநகராட்சி பேருந்து நிலைய வணிக வளாக கடைகள் குத்தகைதாரர்கள் நலச்சங்க தலைவர் ராகவலிங்கம், செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஞானபால் செல்வராஜ் ஆகியோர் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது, பல்வேறு சிரமங்களுக்கு இடையே மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளின் வாடகை நிலுவை தொகையை அபராத வட்டியுடன் செலுத்தி, மாநகராட்சியின் நிபந்தனையை ஏற்று, அனைத்து கடை வாடகையையும் பல கஷ்டங்களுக்கு இடையே நிலுவையின்றி செலுத்தி உள்ளோம்.

கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் முதலாம் அலையின்போதும், இரண்டாம் அலையின்போதும் கடைகள் அனைத்தும் செயல்படாமல் இருந்த காலத்தில், கடை வாடகை தொகையை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், இரண்டு மாதம் மட்டுமே கடை வாடகை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், 3 மாதம் கடை வாடகை தள்ளுபடி செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

The post மாநகராட்சி கடை வாடகை தள்ளுபடி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : COVEY ,Govai Municipal Bus Station Commercial Complex Shops ,Welfare ,Ragavalingam ,Dinakaran ,
× RELATED பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் 18ல் கலந்தாய்வு