×

திருமங்கலம் குன்னத்தூரில் அதிமுக துவக்க விழா கொண்டாட்டம்

திருமங்கலம், அக். 18: திருமங்கலம் அடுத்த டி.குன்னத்தூரில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில் அதிமுக 52ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இங்குள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். பின்னர் உதயகுமார் கட்சியினருக்கு இனிப்பு வழங்கி பேசுகையில், ‘அதிமுக தோன்றி 52 ஆண்டுகளாகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை மீட்டு எடுத்தார். தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி உறுப்பினர்களை கட்சியில் உருவாக்கியுள்ளார். அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வலுமையாக உள்ளது. வரும் அக்.30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க வேண்டும்.

தேவர் குருபூஜையில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இதேபோல் மருதுபாண்டியர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வேண்டும்’ என்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் தவசி, நீதிபதி தமிழரசன், மாணிக்கம், சரவணன், கருப்பையா, மாவட்ட நிர்வாகிகள் முருகன், தமிழ்செல்வன், வாகை சிவசக்தி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமையா, கண்ணன், பிரபு சங்கர், நகர செயலாளர் விஜயன், பூமாராஜா ஜெ பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், திருமங்கலம் யூனியன் சேர்மன் லதா ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருமங்கலம் குன்னத்தூரில் அதிமுக துவக்க விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tirumangalam Kunnathur ,Tirumangalam ,Jayalalitha Assembly ,Madurai ,Suburb West ,District ,D. Kunnathur ,AIADMK Inauguration ,Dinakaran ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...