×

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் சார்பில் ‘உங்கள் சந்திரயான்’ புதிய இணையதளம் தொடக்கம்

சென்னை: ‘உங்கள் சந்திரயான்’ என்ற புதிய இணையதளத்தை ஒன்றிய கல்வி அமைச்சகம் தொடங்கி உள்ளது. இந்த சிறப்பு பாடத்திட்டங்களில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது. சந்திரயான்-3 வெற்றி உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்த வெற்றி, இளம் தலைமுறையினரிடம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரித்து இருக்கிறது. இதனால் அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பாடத் திட்டங்களில் சேர ஆர்வமும் காட்டி வருகின்றனர். அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், ஒன்றிய கல்வி அமைச்சகம் சந்திரயான் தொடர்பான பாடத்திட்டங்கள் மற்றும் இணையதளத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தது.

அதன்படி, ‘உங்கள் சந்திரயான்’ என்ற புதிய இணையதளத்தை கல்வி அமைச்சகம் தொடங்கி இருப்பதாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது. இந்த இணையதளம் வாயிலாக சந்திரயான் திட்டத்தை அடிப்படையாக கொண்ட பல்வேறு செயல்பாடுகளில் மாணaவர்கள் பங்கேற்க முடியும். மேலும் அதற்கேற்ப 10 சிறப்பு பாடத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. எனவே கல்வி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு இருக்கும் உங்கள் சந்திரயான் இணையதளம் குறித்தும், சிறப்பு பாடத்திட்டங்கள் தொடர்பாகவும் உயர்கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே தெரியப்படுத்த வேண்டும் என்றும், ஆர்வமுள்ள மாணவ-மாணவிகளை இந்த சிறப்பு பாடத்திட்டங்களில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும் யு.ஜி.சி. சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

The post ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் சார்பில் ‘உங்கள் சந்திரயான்’ புதிய இணையதளம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Union Ministry of Education ,CHENNAI ,Union Education Ministry ,Dinakaran ,
× RELATED ராயர் பாளையம் நவோதயா வித்யாலயாவில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி