×

மறைமலைநகரில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் ஏராளமான திமுகவினர் பங்கேற்பு

தாம்பரம்: மறைமலைநகரில் 2 நாட்கள் நடைபெறும் ஆய்வு கூட்டத்திற்கு சென்ற, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்லாவரம், தாம்பரத்தில் வழிநெடுக்கிலும் ஏராளமான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில், மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த 2 நாள் ஆய்வுக்கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் சாலை மார்க்கமாக சென்றார். அவருக்கு பல்லாவரம், தாம்பரம் சட்டமன்ற தொகுதிகள் சார்பில் திமுகவினர் வழியெங்கிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்லாவரம் சட்டமன்ற தொகுதி சார்பில், பாண்ட்ஸ் சந்திப்பு மேம்பாலத்தில் இருந்து எம்ஐடி மேம்பாலம் வரை ஜிஎஸ்டி சாலையில் 1000க்கும் மேற்பட்ட மகளிர் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, பகுதி செயலாளர்கள் திருநீர்மலை ஜெயக்குமார், ஏ.கே.கருணாகரன், செம்பாக்கம் ரா.சுரேஷ், மாடம்பாக்கம் நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் தாம்பரம் நாராயணன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதேபோல தாம்பரம் சட்டமன்ற தொகுதி சார்பில் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தலைமையில், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ரமணி ஆதிமூலம், ஜோதிகுமார், சிட்லபாக்கம் சுரேஷ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கார்த்திக், ராஜேஷ் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

The post மறைமலைநகரில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் ஏராளமான திமுகவினர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Karamalainagar ,DMK ,Pallavaram ,Tambaram ,Thambaram ,Chiramalainagar ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...