×

ஏரியில் கழிவுநீர் கொட்டிய லாரி அதிரடி பறிமுதல்

வேளச்சேரி: பெரும்பாக்கம் ஏரியில், கழிவுநீரை கொட்டிய கழிவு நீர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேடவாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் பகுதிகளில் ஏராளமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன. இங்கு இருந்து கழிவுநீர் லாரிகள் மூலம் எடுக்கப்படும் கழிவுநீரை சில கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், பெரும்பாக்கம் ஏரியில் சட்ட விரோதமாக விடுவதாக பெரும்பாக்கம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, போலீசார் பெரும்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு பெரும்பாக்கம் ஏரியை ஒட்டி உள்ள சாலையில் சென்ற கழிவுநீர் லாரியின் முகப்பு விளக்குகள் திடீரென அணைக்கப்பட்டன. இதனால், சந்தேகமடைந்த ரோந்து போலீசார் லாரியின் அருகே சென்று சோதித்தனர். அப்போது கழிவு நீரை ஏரியில் திறந்து விடுவது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கழிவுநீர் லாரியை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில் கழிவு லாரியின் உரிமையாளர் மேடவாக்கத்தை சேர்ந்த தேவராஜ் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

 

The post ஏரியில் கழிவுநீர் கொட்டிய லாரி அதிரடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Perumbakkam lake ,Medavakkam ,Chittalapakkam ,
× RELATED மேடவாக்கம் மேம்பாலத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து