×

திமுக வர்த்தகர்அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம்: செயலாளர் காசிமுத்து மாணிக்கம் அறிவிப்பு

சென்னை: திமுக வர்த்தகர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் நியமனம் செய்து திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, மாவட்ட செயலாளர் ஒப்புதலோடு திமுக வர்த்தகர் அணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பின்வருமாறு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை, தெற்கு மாவட்டம் தலைவர் ராமமூர்த்தி, துணை தலைவர் துரைராஜ், அமைப்பாளர் விஜயபாலா, சென்னை மேற்கு மாவட்டம் தலைவர் மெய்.சரவணன், துணைத் தலைவர் எ.ஜி.ரமேஷ், அமைப்பாளர் விஜயராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதைப்போன்று அரியலூர் மாவட்டம், ராமநாதபுரம், கரூர், கோவை தெற்கு மாவட்டம், கோவை மாநகர் மாவட்டம், கோவை வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தென்காசி தெற்கு, வடக்கு மாவட்டம், நீலகிரி, நெல்லை, புதுச்சேரி-காரைக்கால் மாநிலம், புதுச்சேரி, விருதுநகர் தெற்கு மாவட்டம், வேலூர், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், தருமபுரி கிழக்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் தலைவர், துணை தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post திமுக வர்த்தகர்அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம்: செயலாளர் காசிமுத்து மாணிக்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Trade Team District ,Kasimuthu Manickam ,Chennai ,DMK Trade Team ,Kasimuthu ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...