×

காஞ்சிபுரத்தில் நாளை முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாளக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நாளை மாலை 5.30 மணிக்கு முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களை சார்ந்த விதவையர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் நாளை முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram District Collector ,Kalachelvi Mohan ,
× RELATED தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம்