×

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்; மகளிருக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி, ரூ.500-க்கு சமையல் கேஸ், ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு

போபால்: மத்தியப்பிரதேசத்தில் மகளிருக்கு மாதம் 1,500 நிதியுதவி, 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர், 25 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு உள்பட 59 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. இதன்படி சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சி அறிவித்துள்ளது.

106 பக்கங்களை கொண்ட 59 வாக்குறுதிகளை மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வெளியிட்டார். அதில் மகளிருக்கு மாதம் 1,500 ரூபாய் நிதியுதவி திட்டம், 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

நெல் குவிண்டால் ரூ.2,500க்கு கொள்முதல் செய்யப்படும். 100 யூனிட் வரை இலவச மின்சாரம், 100 முதல் 200 யூனிட் வரை பாதி கட்டணம். மேலும் அரசு பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படும். 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு 1000 ரூபாயும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500ம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு; மத்தியப்பிரதேசத்திற்கு என ஐபிஎல் கிரிக்கெட் அணி உருவாக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது.

The post மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்; மகளிருக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி, ரூ.500-க்கு சமையல் கேஸ், ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு appeared first on Dinakaran.

Tags : Congress ,Madhya Pradesh ,Bhopal ,
× RELATED மபியில் கல்லூரிக்குள் நுழைந்து பேராசிரியர் மீது தாக்குதல்