×

அதிமுகவினரை பிரிக்க முடியாது.. எம்.ஜி.ஆர்., அம்மா போல தான் இபிஎஸ்.. எஸ்.பி வேலுமணி பேட்டி

கோவை: அதிமுகவில் இருந்து என்னை மட்டுமல்ல. யாரையும் பிரிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுகவின் 52ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோவையில் அண்ணா சிலை பகுதியில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.பி.வேலுமணி; நான் ஆரம்பத்திலிருந்து கட்சிக்காக பாடுபட்டு வந்தவன். தந்தை காலத்திலிருந்து அதிமுகவில் இருக்கிறேன்.. எம்.ஜி.ஆர்., அம்மா போல தான் இபிஎஸ். எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர். கோவை மக்கள் இபிஎஸ் முதலமைச்சராக வரவேண்டும் என்று தான் வாக்களித்தார்கள். அரசு ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் எடப்பாடியார் எப்போது மீண்டும் முதலமைச்சராவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடியார் சொன்னதை நாம் செய்தாலே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும். ஏக்நாத் ஷிண்டே அவரது கட்சிக்கு துரோகம் செய்தவர். நான் அதிமுககாரன். அதிமுகவில் இருந்து என்னை மட்டுமல்ல, யாரையும் பிரிக்க முடியாது. ஏதாவது குழப்பம் ஏற்படுத்தி எங்களை பிரிக்க நினைக்கிறார்கள், அது நடக்காது. நான் உள்பட ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் நிற்கிறோம் இவ்வாறு கூறினார்.

The post அதிமுகவினரை பிரிக்க முடியாது.. எம்.ஜி.ஆர்., அம்மா போல தான் இபிஎஸ்.. எஸ்.பி வேலுமணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : M. G. R. ,EPS ,S. B Velumani ,COVEY ,former ,minister ,S. P Velumani ,Supreme ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…