×

கோயில் பெயரால் வனத்தை குப்பைக்காடாக மாற்றுகிறார்கள்: ஐகோர்ட் கிளை நீதிபதி வேதனை

மதுரை: கோயில் பெயரால் வனத்தை குப்பைக்காடாக மாற்றுகிறார்கள் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலில் 3 நாள் தங்கி நவராத்திரி விழா நடத்த அனுமதி கோரி சடையாண்டி என்பவர் மனு தாக்கல் செய்தார். விழா நேரத்தில் அனுமதித்தபோது பக்தர்கள் மாற்றுவழியில் வனத்தில் நுழைந்து சமைத்ததால் வனத்தில் தீப்பிடித்தது என வனத்துறை தெரிவித்தது. வனத்தில் தீப்பற்றியதால் விலங்குகளுக்கும், மரங்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது என்று வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.

The post கோயில் பெயரால் வனத்தை குப்பைக்காடாக மாற்றுகிறார்கள்: ஐகோர்ட் கிளை நீதிபதி வேதனை appeared first on Dinakaran.

Tags : Angam ,Madurai ,Srivilliputhur Chaturagiri… ,ICourt ,Judge ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி