×

கொடைக்கானலில் அதிகளவு மழை 43.6 மி.மீ. மழை பதிவு

திண்டுக்கல், அக். 17: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழநி, வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4 மணியிலிருந்து பெய்த கனமழை காலை 8 மணி வரை பெய்தது. இதனால் மாவட்ட கலெக்டர் பூங்கொடி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டார். நேற்று பெய்த மழையில் அதிகப்படியாக கொடைக்கானல் பிரைன் பூங்கா பகுதியில் 43.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதுபோல் பழநி- 14 மி.மீ, சத்திரப்பட்டி- 6.0மி.மீ, நத்தம்- 1 மி.மீ, வேடசந்தூர்- 1.6 மி.மீ, புகையிலை நிலையம்- 1.6 மி.மீ, காமாட்சிபுரம்- 11.5 மி.மீ என மழை பதிவாகி உள்ளது. கொடைக்கானலில் அதிகளவு மழை பெய்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post கொடைக்கானலில் அதிகளவு மழை 43.6 மி.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Dindigul district ,Nattam ,Vedasandur ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...