×

முன்னாள்-இன்னாள் தலைவர்கள் மோதல் புதுச்சேரி பாஜவில் குஸ்தி: கோஷ்டி பூசலால் ரகசிய கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜ தலைவராக பொறுப்பேற்ற செல்வகணபதி எம்பிக்கு பாராட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில் பாஜ அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பாஜ ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், முன்னாள் தலைவரான சாமிநாதன் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார். வேறு சில காரணங்களால் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் உட்கட்சி பூசலால்தான் அவர் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே சமீபகால கட்சி நடவடிக்கையில் அதிருப்தில் உள்ள சாமிநாதனின் ஆதரவாளர்கள் சிலர், ரகசிய கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொண்டு இருப்பதாகவும், அவர்கள் எந்த நேரத்திலும் முக்கிய முடிவுகளை எடுக்கலாம் எனவும் தகவல் பரவி வருகின்றன.

அதாவது கட்சி பதவிகளில் முக்கியத்துவம், முக்கிய நிகழ்ச்சிகளில் புறக்கணித்தலை தவிர்த்தல் உள்ளிட்ட தங்களது எதிர்பார்ப்புகளை தேசிய, மாநில தலைமைக்கு தெரியப்படுத்துவதற்காக இதுபோன்று அவர் செயல்படுவதாக எதிர்அணியினர் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இவ்விவகாரத்தில் அடுத்தடுத்து கட்சித் தலைமை எடுக்கும் முடிவை பொறுத்து இவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

The post முன்னாள்-இன்னாள் தலைவர்கள் மோதல் புதுச்சேரி பாஜவில் குஸ்தி: கோஷ்டி பூசலால் ரகசிய கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Puducherry Bajaj ,Puducherry ,Selvaganapathy ,Puducherry State ,BJP ,President ,Union… ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு முழு பட்ஜெட் தாக்கல்...