×

குமரியில் மது அருந்தி வாகனம் ஓட்டிய 15 பேர் சிக்கினர்; போக்குவரத்து விதி மீறிய 1,661 பேர் மீது வழக்குப்பதிவு: நான்கு வழி சாலையில் நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. இதில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்ெகாள்கிறது. ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில், சாலை விபத்து தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடக்கிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகளை நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் முறையாக செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அரசு துறைகள் ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்தாலும் விதிமுறை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக சாலைகளில் பைக்குகளில் அதிக வேகமாக செல்கிறார்கள்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் டிரைவிங் உள்ளிட்டவையும் அதிகரித்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுதல், சீட் பெல்ட் இல்லாமல் கார் ஓட்டுதல், குடிபோதை மற்றும் செல்போன் டிரைவிங் உள்ளிட்டவற்றுக்கு அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதத்துடன், வாகனமும் பறிமுதல் செய்படுகிறது. மேலும் அவர்களின் லைசென்சு ரத்து செய்யவும் பரிந்துரைப்பதுடன், சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே வாகனத்தை மீட்க முடியும். இவ்வளவு கடுமையான கெடுபிடிகள் இருந்தாலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. குறிப்பாக இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு வரை குடிபோதையில் பைக் மற்றும் கார்களில் வலம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதை கட்டுப்படுத்தும் வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து வழக்கு பதிவு செய்ய எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் குடிபோதையில் கார், பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை ஓட்டியதாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தக்கலை துணை போலீஸ் சரகத்தில் அதிகபட்சமாக 6 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 279 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுதல், அதிக வேகம், செல்போன் டிரைவிங், ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 909 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

நாகர்கோவில் துணை போலீஸ் சரகத்தில் 237 வழக்குகள், தக்கலை துணை போலீஸ் சரகத்தில் 152 வழக்குகள், குளச்சலில் 185 வழக்குகள், கன்னியாகுமரி சரகத்தில் 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. நேற்று முன் தினம் 752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 நாட்களில் 1,661 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நான்கு வழிச்சாலை பகுதிகளில் அதிகளவில் பைக் ரேஸ் நடப்பதாக தகவல்கள் வந்துள்ளதை தொடர்ந்து, அந்த பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post குமரியில் மது அருந்தி வாகனம் ஓட்டிய 15 பேர் சிக்கினர்; போக்குவரத்து விதி மீறிய 1,661 பேர் மீது வழக்குப்பதிவு: நான்கு வழி சாலையில் நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagarko ,Dinakaraan ,
× RELATED நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில்...