×

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டம் சோதனை ஓட்டம்: இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டம் வரும் 21ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சோதனை கலம் செலுத்தப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சந்திரயான்-3, ஆதித்யா-L1 என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விண்வெளித்துறையில் மிகவும் எதிர்பார்க்க கூடிய ஒரு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு கொண்டு வரகூடிய ககன்யான் திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்க கூடிய சூழலில் 21-ம் தேதி ககன்யான் திட்டத்திற்கான சோதனை ஓட்டம் நடைபெறும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக விண்வெளி வெளி வீரர்கள் தயார் செய்யபட்டுவிட்டனர். விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ககன்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பல்வேறுகட்டகளை இஸ்ரோ முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், 21-ம் தேதி காலை 7 மணிக்கு சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் சோதனை என்பது நடைபெறவுள்ளது. மிக முக்கிய திட்டம் என்பதால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்னதாக பாதிப்புகள் உள்ளதா என்பதை சோதனை ஓட்டம் மூலம் கண்டறிய முடியும். இந்த சோதனையில் ரோபோ ஒன்றை அனுப்பி சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

The post மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டம் சோதனை ஓட்டம்: இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ISRO's' ,ISRO ,BANGALORE ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...