×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த தொழில் முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த ஊர்தி மூலமாக காய்கறி விற்பனை செய்யும் திட்டம்

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஊர்தி மூலமாக காய்கறி விற்பனை செய்ய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த தொழில் முனைவோர்களின் பொருளாதார ஊர்ச்சியினை மேம்படுத்த ஊர்தி மூலமாக காய்கறி விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 மாது முதல் 55 வயது வரை குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000 மிகாமல் இருக்க வேண்டும். சென்ணை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிப்பாராக இருக்க வேண்டும். இத்தொழிலுக்கு திட்ட தொகையாக ரூ.3.24.00 வழங்கப்படும். இத்திட்டம் தொகையில் ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவிகிதம் மானியமும் மற்றும் பழங்குடியினருக்கு தனி நபர்களுக்கு திட்டத்தொமையில் 50% மானியம் வழங்குப்படும். எஞ்சிய தொகை வங்கி கடன் தொகைபாக பெற வழிவகை செய்யப்படும்

இத்திட்டத்தில் ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையான முகவரியில் புகைப்படம் மற்றும் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., தெரிவிந்துள்ளார்கள்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த தொழில் முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த ஊர்தி மூலமாக காய்கறி விற்பனை செய்யும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidian ,Chennai ,Tamil Nadu ,Adi Dravidar Housing and Development Corporation ,TADCO ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...