×

ங்காயம் விலை உயர்வு

வெசேந்தமங்கலம்: சின்ன வெங்காயம் விலை உயர்ந்து வருவதால், எருமைப்பட்டி வட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். எருமப்பட்டி வட்டார பகுதியான நவலடிப்பட்டி, பவித்திரம், பவித்திரம் புதூர், வரகூர் கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் வைகாசி மாத பட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டனர். கடந்த ஒரு மாத காலமாக அறுவடை பணி நடைபெற்று வந்தது. அப்போது, சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை இல்லாததால் வியாபாரிகள் வாங்க வரவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த சின்ன வெங்காயங்களை பட்டறை அமைத்து சேமித்து வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை சற்று ஏற தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ₹25க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் படிப்படியாக விலை உயர்ந்து, தற்போது ₹60க்கு விற்பனையாகி வருகிறது. இதையடுத்து, சேமித்து வைத்த சின்ன வெங்காயங்களை எடுத்து காய வைத்து விற்பனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விலை உயர்ந்து வருவதால் நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post ங்காயம் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Buffalo ,Navalatipatti ,Erumpatti ,Dinakaraan ,
× RELATED அலமாதி அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது: 5 கிலோ பறிமுதல்