×

தென்காசியில் ரூ.31 லட்சத்தில் உயர் மின் கோபுர விளக்குகள் தனுஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார்

தென்காசி: தென்காசி நகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 31 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உயர் மின் கோபுர விளக்குகளை நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தனுஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார். தென்காசி நகராட்சிக்குட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மவுண்ட் ரோடு, நடுப்பேட்டை பள்ளி தெரு, தெப்பக்குளம் தெரு, பாறையடி தெரு, வாய்க்கால் பாலம், அணைக்கரை தெரு, முக்கூடல் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட 9 இடங்களில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க 31 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவடைந்ததது. இதையடுத்து நேற்று தனுஷ்குமார் எம்.பி. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உயர் மின் கோபுர விளக்குகளை துவக்கி வைத்தார்.

The post தென்காசியில் ரூ.31 லட்சத்தில் உயர் மின் கோபுர விளக்குகள் தனுஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Dhanush Kumar ,Tenkasi ,Parliament ,Development Fund ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை