×

நாளை மறுதினம் திருமணம் 30 பவுன், ரூ.7 லட்சத்துடன் மணப்பெண் ‘எஸ்கேப்’

நாகர்கோவில்: குமரி மாவட்டம் பொழிக்கரை பகுதியை சேர்ந்தவர் கபேரியல். இவரது மகள் மரிய சானு (23). எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு நாளை மறுதினம் (18ம் தேதி) திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரி புதுக்கிராமம் பகுதியில் உள்ள சகோதரி வீட்டுக்கு மரிய சானு வந்திருந்தார். அவருடன் தாயாரும் இருந்தார். இரவு அனைவரும் ஒன்றாக தூங்கினர்.

நள்ளிரவில் எழுந்து பார்த்த போது திடீரென மரிய சானுவை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் பெற்றோர் அளித்த புகாரில், 30 பவுன் நகை, ரூ.7 லட்சத்துடன் மரிய சானு மாயமாகி விட்டதாக கூறி உள்ளனர். போலீசார் வழக்குபதிந்து மரிய சானுவை தேடி வருகின்றனர்.

The post நாளை மறுதினம் திருமணம் 30 பவுன், ரூ.7 லட்சத்துடன் மணப்பெண் ‘எஸ்கேப்’ appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Gabriel ,Pozhikarai ,Kumari district ,Maria Sanu ,Dinakaran ,
× RELATED பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும்...