×

கே.எஸ்.அழகிரி பேட்டி தமிழ்நாட்டில் பாஜ துளிர் விட வாய்ப்பே கிடையாது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: சென்னையில் நடந்த மகளிர் உரிமை மாநாடு, இந்தியா கூட்டணியின் மகளிர் மாநாடு தான். சோனியா காந்தி அற்புதமாக உரையாற்றினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை, மேலும் மெருகூட்டியது. ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் கண்டிப்பாக நடக்கும்.

பிரியங்கா காந்தி, தமிழ்நாட்டுக்கு மீண்டும் பிரசாரத்திற்கு வர இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில், வேட்பாளர்கள் பட்டியலை தாமதமாக தான் அறிவிப்போம். அதில் ஒரு திரில் உள்ளது. தமிழ்நாட்டில் பாஜ துளிர் விடுவதற்கு கூட வாய்ப்பு கிடையாது. நிலைமை அப்படி இருக்கையில், எங்கள் கட்சியில் உள்ள சில நண்பர்களே பாஜ வளர்வதாக கூறி வருவது விசித்திரமாக இருக்கிறது என்று கூறினார்.

The post கே.எஸ்.அழகிரி பேட்டி தமிழ்நாட்டில் பாஜ துளிர் விட வாய்ப்பே கிடையாது appeared first on Dinakaran.

Tags : KS Azhagiri ,BJP ,Tamil Nadu ,Chennai ,Chennai airport ,Women's rights conference ,India Alliance ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...