×

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்ட்டை 5 கிமீ தோளில் தூக்கி சென்ற பாதுகாப்பு படை

ராஞ்சி: துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்டை காப்பாற்ற அவரை பாதுகாப்பு படையினர் 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது. அதன்படி ஹுசிபி காட்டுக்குள் மாவோயிஸ்டுகள் மறைந்துள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஹுசிபி காட்டை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த ஒரு மாவோயிஸ்ட்டை காட்டுக்குள்ளேயே விட்டு தப்பினர். இதையடுத்து காட்டுக்குள் சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு அடிபட்டு கிடந்த மாவோயிஸ்ட்டை காட்டுப் பகுதிக்குள்ளே இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் தோளில் தூக்கி கொண்டு சென்றனர். மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை பெற்ற மாவோயிஸ்ட் பின்னர் விமானம் மூலம் தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதி மேல்சிகிச்சை பெற்று வருகிறார். மாவோயிஸ்ட் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாதுகாப்பு படையினரே அவரின் உயிரை காப்பாற்ற தோளில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

The post துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்ட்டை 5 கிமீ தோளில் தூக்கி சென்ற பாதுகாப்பு படை appeared first on Dinakaran.

Tags : Maoist ,Ranchi ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள...