×

காங்கிரஸ் கருத்து ம.பி. முதல்வர் சவுகானை ஓரங்கட்டும் பாஜ

போபால்: மத்தியபிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் 15 ஆண்டுகால ஆட்சியை அகற்றி விட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பதவியேற்றார். ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்கள் 22 பேருடன் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தனர். இதையடுத்து பாஜ மீண்டும் ஆட்சியமைக்க சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதையடுத்து மத்தியபிரதேசத்தின் 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 17ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 144 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வௌியிட்டது. இதில் முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பாஜவின் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தான் தற்போதைய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போபாலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சரண் சிங் சப்ரா, “மாநில தலைவர் கமல்நாத் தலைமை மீது காங்கிரஸ் நம்பிக்கை வைத்துள்ளது. முதல் பட்டியலிலேயே நாங்கள் கமல்நாத்தின் பெயரை அறிவித்துள்ளோம். சிவ்ராஜ் சிங் சவுகான் ஒரு தோல்வியடைந்த நிகழ்ச்சி. அவர் மீது பந்தயம் கட்ட பாஜ விரும்பவில்லை. பாஜவில் சவுகான் ஓரங்கட்டப்படுகிறார்” என்று இவ்வாறு தெரிவித்தார்.

The post காங்கிரஸ் கருத்து ம.பி. முதல்வர் சவுகானை ஓரங்கட்டும் பாஜ appeared first on Dinakaran.

Tags : Congress ,M.P. ,BJP ,Chief Minister ,Chauhan ,Bhopal ,2018 Legislative Assembly elections ,Madhya Pradesh ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...