×

கம்பத்தில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் தெருநாய்கள் கலக்கத்தில் பொதுமக்கள்

கம்பம்: கம்பத்தில் தெருவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 80 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். கம்பம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. கம்பமெட்டு ரோடு, கூடலூர் ரோடு, காட்டுப்பள்ளி வாசல் ரோடு , கோம்பை ரோடு ரோடு ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் கட்டிடங்கள் பெருகிக்கொண்டே செல்கின்றன. கம்பத்தில் பொதுமக்கள் பெருகி கொண்டு செல்வதை போலவே, தெரு நாய்களின் எண்ணிக்கையும் எண்ணிக்கையும் அதிக அளவில் பெருகிக்கொண்டே செல்கிறது. கம்பத்தில் உள்ள 33 வார்டுகளிலும் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. தெருவில் செல்லும் சிறுவர்களை ஒரு சில தெருநாய்கள் ஓடி சென்று கடிப்பது தொடர்கதையாக உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மூலமாக நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தாலும், நகராட்சி சார்பில் அடுத்த மாதம் முதலே தெருநாய்களை பிடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது. இதற்கிடையில் அரசு அதிகாரிகள் தெருநாய்களை பிடித்துக் கொல்லக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு உள்ளதால், தெருநாய்களைப் பிடித்து அவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து, மீண்டும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விடப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கம்பத்தில் சுற்றித் தெரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகும்.

The post கம்பத்தில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் தெருநாய்கள் கலக்கத்தில் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Dinakaraan ,
× RELATED கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில்...