×

சென்னை கால்பந்து லீக் அரசுப் பள்ளிகள் அசத்தல்

சென்னை: அரசுப் பள்ளிகளுக்கு இடையே ‘சென்னை கால்பந்து லீக்’ போட்டியின் 3வது தொடர் சென்னையில் நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கென தனித்தனியே மொத்தம் 24 லீக் ஆட்டங்கள் நடந்தன. மாணவிகள் பிரிவு பைனலில் துரைப்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளி – பெருங்குடி அரசு மேனிலைப் பள்ளி அணிகள் நேற்று மோதின. அதில் துரைப்பாக்கம் பள்ளி 6-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மாணவர்களுக்கான பைனலில் சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேனிலைப்பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் அண்ணாசாலை மதரசா அசம் அரசு உயர்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கும், மாணவிகள் பிரிவில் அதிக கோல் (9) துரைப்பாக்கம் பள்ளி மாணவி ஸ்வேதா, மாணவர்கள் பிரிவில் அதிக கோல் (12) அடித்த சைதாப்பேட்டை பள்ளி மாணவர் சாய்சந்தோஷ் ஆகியோருக்கும் பரிசுப் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன் இளவேனில் வாலறிவன், சர்வதேச டேபிள் டென்னிஸ் சாம்பியன் அசந்தா சரத் கமல் பரிசுக் கோப்பைகளை வழங்கினர்.

The post சென்னை கால்பந்து லீக் அரசுப் பள்ளிகள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai Football League ,Govt ,Chennai ,Chennai Football League Govt ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு 6...