×

புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

ஆவடி, அக். 15: பராமரிப்பு பணி காரணமாக புறநகர் மற்றும் சென்னை-கூடூர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடிக்கு இரவு 11.30, 11.45 மணிக்கு புறப்படும் ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், வரும் 17ம் தேதி மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 5.20, 7.45 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து காலை 4.45, 6.40 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்களும், மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 9.15 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், 17ம்தேதி மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7.30, 8.35, 10.15 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, அரக்கோணத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு கடப்பா செல்லும் மின்சார ரயில், காட்பாடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு திருப்பதி செல்லும் மின்சார ரயில், காட்பாடியில் இருந்து காலை 9.30 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் மின்சார ரயில் நாளை தேதி 22ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post புறநகர் மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Suburban ,Chennai ,Kudoor ,Southern Railway ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் பயிற்சி