×

உலக இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி

ஈரோடு, அக்.15: உலக இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாள் உலக இளைஞர் எழுச்சி நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதனடிப்படையில், சிக்கய்யநாயக்கர் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர் கமலக்கண்ணன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணி சத்தி சாலை வழியாக வஉசி பூங்காவில் நிறைவடைந்தது.இதில் பேராசிரியர்கள் சுதாகர், பிரபு, சீனிவாசன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பேரணிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் திவ்யா குருசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

The post உலக இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : World Youth Day ,Erode ,Chikkaiya Nayakar College ,World Youth Day Awareness Rally ,Dinakaran ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது