×

ஜான் பிரிட்டோ மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜான் பிரிட்டோ மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜான் பிரிட்டோ மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினேன். தாவரவியல் வல்லுநரான ஜான் பிரிட்டோ ஏழை, எளிய மாணவர்கள் பலரும் உயர்கல்வி பெற உதவி, அவர்கள் வேலைவாய்ப்புகளை பெறவும் உறுதுணையாக இருந்துள்ளார். அவரது பிரிவால் வாடும் ஜெயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post ஜான் பிரிட்டோ மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : M. K. Stalin ,John Brito ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Trichy St.Joseph's College.… ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு