×

இந்து சமய அறநிலையத்துறையில் 100 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 100 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 100 தட்டச்சர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றுவதற்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த பதவி உயர்வு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 539 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 208 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், துறையில் கருணை அடிப்படையில் 24 பணியாளர்களுக்கும், கோயில்களில் பணிபுரிந்து பணியின் போது இறந்த 99 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கோயில் சொத்துகளை மீட்டெடுத்ததில் எதுவும் ஒளிவுமறைவு இல்லை. யார் கேட்டாலும் இந்த விவரங்கள் அடங்கிய 2 புத்தகங்களும் அனுப்பி வைக்க இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கிறது. அண்ணாமலை அலுவலகத்திற்கும் இந்த புத்தகங்களை ஏற்கனவே அனுப்பி வைத்திருக்கிறோம். இந்த ஆட்சியின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணி ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.

The post இந்து சமய அறநிலையத்துறையில் 100 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Charities Department ,Minister ,Shekhar Babu ,Chennai ,Hindu ,Charities ,Tamil Nadu Public Service Commission ,Charity Commissioner ,
× RELATED பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு...