×

உப்புக்கோட்டையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி: பெரியாற்றில் நடந்தது

 

தேனி, அக். 14: தேனி அருகே உப்புக்கோட்டையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இயற்கை பேரிடர் குறைப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இத்தினத்தையொட்டி தேனி அருகே உப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயில் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் போடி தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

ஒத்திகையின்போது, மரக்கட்டை, காலி காஸ் சிலிண்டர், பிளாஸ்டிக் கேன்கள், லைப்ஜாக்கெட் ஆகியவை மூலம் வெள்ளக்காலங்களில் நீச்சலடித்து தப்பிப்பது குறித்து தத்ரூபமாக தீயணைப்பு படை வீரர்கள் ஒத்திகை செய்து காண்பித்தனர். இதனை உப்புக்கோட்டை பச்சையப்பா பள்ளி மாணவர்கள் நேரில் கண்டு பயிற்சி பெற்றனர்.

The post உப்புக்கோட்டையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி: பெரியாற்றில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Uplukottai ,Periyar ,Theni ,Mullaiperiaat ,Uplukkottai ,
× RELATED தேனி அருகே உப்புக்கோட்டையில் அரசு...