×

கோவில் திருவிழா வாலிபர் கொலை: வழக்கில் ஒருவர் கைது

தேவதானப்பட்டி, அக். 14: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தில் கோவில் திருவிழாவில் முன்விரோதம் காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஒருவரை போலீசார் கைது செய்தனர். தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தில் மாரியம்மன் கோவில் புரட்டாசி மாதத்திருவிழா நடைபெற்றது. இதில் முன்விரோதம் காரணமாக ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்த பெருமாள்சாமி மகன் இருளப்பன்(34) என்பவருக்கும், சிந்துவம்பட்டியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு இருளப்பன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் சிந்துவம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கார்த்திக்ராஜா, சண்முகம் மகன் முத்துராஜ், களஞ்சியம் மகன் காமாட்சி, சண்முகம் மகன் கோபி, நாகேஷ் மகன் பாலகிருஷ்ணன், கிளிகிளி மகன்கள் பிரவீன்குமார், சாந்தகுமார், மற்றும் பாலா ஆகிய 8 பேர் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தப்பியோடிய குற்றவாளிகளை தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில் தலைமறைவாக இருந்த களஞ்சியம் மகன் காமாட்சி(29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மற்ற குற்றவாளிகளை தனிப்படைகள் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post கோவில் திருவிழா வாலிபர் கொலை: வழக்கில் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Temple festival ,Devadanapatti ,Jayamangalam ,Dinakaran ,
× RELATED வீரபத்திர சுவாமி கோயில் விழா