×

தா.பேட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி ஆசிரியர் பரிதாப பலி

தா.பேட்டை: தா.பேட்டை அடுத்த பேரூர் கிராமம் மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் பெரியசாமி (33) தா.பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றவர் பால் கறப்பதற்காக வீட்டிலிருந்து தோட்டத்திற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது தர்மராஜ் என்பவாது தோட்டத்தின் அருகே மின்கம்பத்தில் இருந்து மின்சார ஒயர் அறுந்து கீழே விழுந்து கிடந்ததை பார்க்காமல் சென்ற பெரியசாமியின் பைக்கில் மின்சார வயர் சிக்கி கொண்டதாக தெரிகிறது. இதில் பெரியசாமி மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

The post தா.பேட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி ஆசிரியர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Tha. Pettai ,Tha.pet ,Natesan ,Mahatma Gandhi street, Perur village ,Periyaswamy ,Dinakaran ,
× RELATED பள்ளி சிறுவர்களுக்கான தடகள போட்டி...