×

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து விலகல்

 

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தவர் கெவின் மெகார்த்தி. குடியரசு கட்சியை சேர்ந்த மெகார்த்தி ஆளும் கட்சி எம்பிக்களுடன் நெருக்கமாக இருப்பதாக அவரது கட்சியினர் குற்றம் சாட்டினர். சமீபத்தில் மெகார்த்தியை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை குடியரசு கட்சி எம்பிக்கள் கொண்டு வந்து பதவியில் இருந்து அவரை நீக்கினர். சபாநாயகர் பதவிக்கு ஸ்டீவ் ஸ்காலைஸ் போட்டியிடுவதாக அறிவித்தார். ஸ்காலைஸ் சபாநாயகராக ஆவதற்கு கட்சியில் உள்ள எம்பிக்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியதில் ஸ்காலைஸ்க்கு பல எம்பிக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் ஸ்காலைஸ் அறிவித்தார்.

The post அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து விலகல் appeared first on Dinakaran.

Tags : Republican ,Speaker of the ,United States House of Representatives ,Washington ,Kevin McCarthy ,US Parliament ,McCarthy ,Republican Party ,US ,Speaker of the House ,
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்